தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

திங்கள், ஜூலை 17, 2006

தமிழுக்கு தடா!

தமிழ்நாட்டில் ஓரிடத்தில் அதுவும் படித்தவன் முதல் பாமரன் வரை கூடும் ஓர் ஆலயத்தில் தமிழிற்கு தடை எனில், தமிழ்நாட்டில் இளிச்சவாயர்கள் அதிகரித்து விட்டார்கள் என சிலர் நினைப்பது போல் தோன்றுகிறது.
இந்நிலை இப்படியே தொடருமாயின், அவர்கள் நினைத்திருக்கும் இளிச்சவாயர் நிலையை உறுதிப்படுத்த நாம் தயாராகிவிட்டோம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

சிதம்பரத்தில் ஓர் இந்துக்கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அறிந்தேன்.

இது வேறு ஏதாவது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்சனை எனில் வேறு விடயம். ஆனால் உண்மையிலேயே அக்கோவிலில் யாருமே தமிழில் பாட தடை எனில் இது பாரதூரமான விடயமே.

இப்படியே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட சொத்து என தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமது விருப்பத்திற்கோ அல்லது வெளிநாட்டு புல்லுருவிகளின் விருப்பத்திற்கோ, ஒவ்வோரு மொழிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அங்கே எம் தாய்த் தமிழிற்கே தடை விதிக்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டால், தமிழ் நாடு தமிழுக்கு தாய்வீடு என்ற நிலையை எப்படிக் கட்டிக் காக்க முடியும்.

பிரான்சிலே ஒரு பிரதேசத்தில் இப்படி ஒரு பொதுமக்கள் பயன்பாட்டு நிலையத்தை உருவாக்கி அங்கே "பிரஞ்" க்கு தடை விதிக்க முடியுமா? அல்லது அப்படியே ஜேர்மனியில் "டொச்" இற்கு தடை விதிக்க முடியுமா?

நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில் சொன்னது போல தமிழ்நாட்டில் தான் இளிச்சவாயர்கள் அதிகரித்து விட்டார்கள் என்பதை நிரூபிப்பது போல் அல்லவா இருக்கிறது இச்சம்பவம்.

அதுவும் தமிழறிஞர் கலைஞர் கருனாநிதி ஆட்சிக்காலத்தில்!

நிலைமை இப்படியே போனால், விரைவில் தமிழுக்கு பட்டையோ, நாமமோ நிச்சயம்.

17 மறுமொழிகள்:

  • At 9:02 PM, Blogger கருப்பு said…

    இதுக்கெல்லாம் விடாது கருப்பு பரபரப்பா பதிவு போட்டாத்தான் நல்லா இருக்கும்.

     

  • At 9:13 PM, Blogger விழி said…

    விடாம கலாய்ங்க கருப்பு!

    ஆனா எனக்கென்னமோ இதுவும் ஒருவிதத்தில, மூடநம்பிக்கைகளின் முகத்திரையை கிழிக்க ஓரு வகை செய்திருப்பது போலும் படுகிறது. இதைப்பார்த்தாவது "சாமி"ன்றது, கொஞ்சம் நரிப்புத்தி சரியா வேலை செய்றவன், பிழைப்புக்கு கண்டு பிடித்த வழின்றத மகாஜனங்க புரிஞ்சுக்கிட்டா தேவல.

     

  • At 9:45 PM, Blogger யாத்ரீகன் said…

    Instead of tamil bloggers meeting in restaurants..

    can we meet in the Chidambaram temple and give a go ?!

    Lets do this, instead of just blogging in a closed space ...

    (sorry for typing in english, esp. in an issue involved with thamizh)

     

  • At 10:13 PM, Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said…

    தமிழ் நாட்டுக்குள் தமிழ் பேசக் கூடாதுங்கறது எல்லாம் ரொம்ப ஓவர் இந்த மாதிரி சொல்ல நினைக்கறவங்களை கூட போலீஸ்ல பிடித்துக் கொடுக்கணும் ஆனா இது மாதிரி இங்கேயே நடந்து கொண்டிருப்பது வேதனைக்குறியது...

     

  • At 10:51 PM, Blogger வெற்றி said…

    விழி,
    உங்களின் பதிவில் கூறப்பட்ட சங்கதி உண்மையெனில் , இச் செயல் வன்மையகக் கண்டிக்கப்படவேண்டியது மட்டுமல்ல, அப்படித் தடை விதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.

    /சிதம்பரத்தில் ஓர் இந்துக்கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அறிந்தேன்./

    சிதம்பரத்தில் இந்து ஆலயம் இருப்பதாக இன்றுதான் அறிந்தேன். சிதம்பரத்தில் உள்ள ஆலயம் சைவ ஆலயம் அல்லவா?

    தமிழ் தெரியாத/புரியாத தெய்வங்களோ மதங்களோ
    தமிழர்களுக்குத் தேவையில்லை. அப்படியான கோவில்களை இழுத்து மூட வேண்டியது தான்.

     

  • At 12:04 AM, Blogger விழிப்பு said…

    கைலாயத்திலிருந்து சிவனுடன் 'கூடவே வந்தோம்' என்று சொன்னவர்கள் தானே அவர்கள்.

    இதுவும் செய்வார்கள் இதற்க்கு மேலும் செய்வார்கள்.

    வாலை ஒட்ட நறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

     

  • At 12:06 AM, Blogger விழிப்பு said…

    கைலாயத்திலிருந்து சிவனுடன் 'கூடவே வந்தோம்' என்று சொன்னவர்கள் தானே அவர்கள்.

    இதுவும் செய்வார்கள் இதற்க்கு மேலும் செய்வார்கள்.

    வாலை ஒட்ட நறுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

     

  • At 1:30 AM, Blogger விழி said…

    யாத்திரீகன், குமரன் எண்ணம், வெற்றி, விழிப்பு, பார்வையிட்டு மறுமொழியிட்டதற்கு நன்றிகள்.

    வெற்றி அவர்களே, சைவ ஆலயம் தான், சுட்டிக்காட்டியதற்கு நன்றி, (இந்து மதத்திற்குள் ஒரு பிரிவு)இந்த மதத்தின் பிரிவுகள் பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கருதியதால் அப்படி எழுதிவிட்டேன்.

    விழிப்பு அவர்களே,
    நாள் வெகு தொலைவில் இல்லை என்று, வெகு நாட்களாகவே சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று நினைக்கிறேன்.

     

  • At 1:58 AM, Blogger விழிப்பு said…

    என்ன செய்வது
    2000 ஆண்டுகளுக்கும் மேலாக பிடித்திருக்கும் கிருமியை ஒழிக்க கொஞ்சம் நாளாகும்தான்.

    முடிந்த அளவு முனைப்புடன் பாடுபடுவோம்.

     

  • At 2:12 AM, Blogger G.Ragavan said…

    ஒவ்வொரு இந்துவும் தில்லையம்பலத்தைப் புறக்கணிக்க வேண்டும். தமிழ் வேண்டாம் என்றால் தமிழனின் பணம் மட்டும் ஏன் வேண்டும்? தில்லை வாழ் அந்தணர்களுக்கு தில்லைக் கோயிலுக்குள்ளே ஆன்மிக வியாபாரம் செல்லுபடியாகல் போக வேண்டும். தமிழர்களே...மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தில்லைக் கோயிலுக்குள்ளே தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை இருக்கும் வரை தில்லைக்குச் செல்வது இல்லை என்ற முடிவெடுங்கள். அதுதான் சரி.

     

  • At 12:21 PM, Anonymous Anonymous said…

    தமிழில் பாட முடியாத தமிழில் அர்ச்சனை செய்யாத கோவில்களை
    தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களை வழிக்கு கொண்டு வர
    இதுதான் சரியான வழி.

     

  • At 9:11 PM, Blogger விழி said…


  • At 10:40 PM, Blogger விழி said…

    G.Ragavan, Anony, பார்வையிட்டு மறுமொழியிட்டதற்கு நன்றிகள்.

    தமிழைக் காக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய நாம் அனைவரும் பின்நிற்க கூடாது.

    தமிழ் நம் தாயைப் போன்றது.

    எங்கிருந்தோ வந்த 'அன்ரியும் ஆண்டியும்' நம் கண்ணி்ல் இருந்தே நம் தாயை மறைத்து குழிதோண்டி புதைக்க எப்படி அனுமதிப்பது.

     

  • At 10:52 PM, Blogger முகமூடி said…

    தொடர்புடைய சுட்டி http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html

     

  • At 10:56 PM, Blogger வெற்றி said…

    இராகவன்,

    /* ஒவ்வொரு இந்துவும் தில்லையம்பலத்தைப் புறக்கணிக்க வேண்டும். தமிழ் வேண்டாம் என்றால் தமிழனின் பணம் மட்டும் ஏன் வேண்டும்? தில்லை வாழ் அந்தணர்களுக்கு தில்லைக் கோயிலுக்குள்ளே ஆன்மிக வியாபாரம் செல்லுபடியாகல் போக வேண்டும். தமிழர்களே */

    தங்களின் இக் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தில்லையம்பதி தமிழர்களின் சொத்து. இத்தலம் எமது பூட்டன்மாரால் கட்டப்பட்டது. அப்படியிருக்கையில் இந்த அந்தணர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது அக்கோவிலில்? அவர்களை அக் கோவிலில் இருந்து அடித்து விரட்டிவிட்டு தமிழர்கள் அக் கோவிலைப் பொறுப்பேற்பது தான் நியாயம்.

     

  • At 11:37 PM, Blogger விழி said…

    முகமூடி தனது தொடர்புடைய சுட்டியை இணைத்துள்ளார், நன்றி முகமூடி, அனைத்தையும் அறிந்து கொள்ள முயல்வது தான் முற்போக்கு வாதிக்கு அழகு. ரகசியம் காப்பது சிதம்பரம் போல வியாபாரம் செய்பவர்களுக்கே உரித்து.

     

  • At 12:11 AM, Anonymous Anonymous said…

    பழந் தமிழ்நாட்டில் சிற்ப அழகும் சிறப்பும்மிக்க கோயில்களைக் கட்டிய சிற்பிகள் அனைவரும் தமிழர்களே.
    கோயில்களைக் கட்டுவித்தவர்களும் அவற்றில் பூசைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடைபெற திரவியங்கள், நிலங்கள்,மானியங்கள் அளித்த மன்னர்களும் தமிழர்களே.
    கோயில்களில் விளக்கு ஏற்றுதல் முதல் கொண்டு பராமரிப்புப் பணிகள் செய்தல் ,கடவுள் சிலைகளுக்கு அலங்காரம் செய்ய மலர் மாலைகள் கட்டுதல், சந்தனம் அரைத்துத் தருதல், கடவுளர் சிலைகளை சப்பரங்களில் வைத்துத் தூக்குதல், தேர்களை இழுத்தல் போன்ற கோயில் தொடர்பான அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள் தமிழர்களே.
    கோயில் கட்டுவதிலிருந்து அதனுடைய அன்றாட பராமரிப்பு வரை அனைத்துப் பணிகளையும் செய்யும் தமிழர்களுக்கு இல்லாத உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்தது. கோயிலைக் கட்டிய சிற்பி தான் செதுக்கிய கடவுள் சிலையைத் தொட முடியாது. அது இருக்கும் கர்ப்பக் கிரகத்திற்குள் நுழைய முடியாது. கோயிலைக் கட்டுவித்த மன்னனின் நிலையும் அதுவேதான்.
    எங்கிருந்தோ வந்தேறிகளாக வந்தவர்கள் எந்த விதத்திலும் கோயில்களுக்கு தொடர்பில்லாதவர்கள் தங்களது ஏகபோகச் சொத்தாக கோயில்களை ஆக்கிக்கொண்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக நீடித்துவரும் இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.
    கோயில்களின் பெயரால் கொள்ளை அடிக்கும் கூட்டம் தமிழ் மண்ணை விட்டு விரட்டப்படவேண்டும்.

    நன்றி: தென்செய்தி

     

Post a Comment

<< முகப்பு