தமிழ் எப்படி வாழப் போகிறது? - 2
புலம் பெயர்ந்த நாடுகளில் தான் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடி தேவைகளை நிறைவேற்றவேண்டியுள்ளது, வேலை செய்யுமிடங்களில் அந்த நாட்டு பயன்பாட்டு மொழியை பயன்படுத்த வேண்டியுள்ளது, சிறுவர்கள் அந்நாட்டு சிறுவர்களுடன் சேர்ந்து அந்நாட்டு மொழிப் பாடசாலைகளில் பயில வேண்டியுள்ளது போன்ற காரணத்தால் தமிழ் பயன்பாடு குறைகிறதென்றால், தமிழ்நாட்டில் பிறந்து வாழ்பவர்களுக்கு என்னவாயிற்று?
எல்லோருமில்லாவிட்டாலும் அனேகர், இதில் குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் அனைவருக்கும் விளங்கும்.
இந்நிலை ஏன்? வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த அடிமைத்தனத்தின் தாக்கம் இன்னும் எங்களைவிட்டு விலகாததாலா? அல்லது ???
வெள்ளைக்காரன் காலத்தில் ஆங்கில மொழி தெரிந்தவனுக்கு ஆங்கிலேயனிடத்தில் வேலை கிடைத்திருக்கக் கூடும். அதனால் அவனது வாழ்க்கைத் தரம் மற்றவர்களை விட சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்கும். இந்நிலை ஆங்கிலம் தெரிந்தவன் முன்னால் ஆங்கிலம் தெரியாதவனை கூனிக்குறுக வைத்திருக்கும்.
ஆனால் இப்போது என்ன வந்ததென்று தெரியவில்லை?
அண்மையில் சண் தொலைக்காட்சியில் கிரிக்கட் வர்ணனையாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள், பிரான்ஸ் நாட்டிலே வெளிவருகின்ற பத்திரிகைகள் இரண்டிலே ஓரிரு ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் காணப்பட்டதால், அப்பத்திரிகைகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஐரோப்பிய நாடு ஒன்றிலே வாடகை வண்டி ஓட்டுனர் ஒருவருக்கு ஆங்கித்திலே நன்றி தெரிவித்ததற்கு அவ்வோட்டுனர் திரும்ப தன் மொழியிலே சொல்லச்சொல்லி அம்மொழியிலே(எனக்கு தெரியவில்லை) அவருக்கு சொல்லிக்கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இங்கே சில தமிழர்கள் தங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதில் பொருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தமிழ் தெரிந்தவர்கள் என்று காட்டிக்கொண்டால் அது தங்களுக்கு இழுக்கு என்று கருதுகிறார்கள்.
ஆதி மனிதனில் இருந்து தற்கால நாகரிகமடைந்த என்று கூறப்படும் மனிதர்கள் நாங்கள் வெகு தூரம் வந்துவிட்டோம் என்று கூறுவதைப் போல, தமிழில் இருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் என்று பகட்டாகக் காட்டிக் கொள்வதில் பெருமைப்படுகிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் தீர்வு என்னவாக இருக்கமுடியும்?
வாசகர்களது பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அடுத்த பதிவில்.......

3 மறுமொழிகள்:
At 9:39 PM,
Anonymous said…
சிறந்த ஒரு முயற்சி, ஏந்கனவே பலராலும் அறியப்பட்ட அலசப்பட்ட விடயம் என்றாலும் மீன்டும் மீன்டும் பேசப்பட வேன்டிய விடயம், வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை.
At 10:35 PM,
பாலசந்தர் கணேசன். said…
இங்கே கனடா மான்ட்ரியாலில் பொதுவாக க்யூபெக் மாநிலத்தில் ஃப்ரென்ஞ் அதற்கான அங்கிகாரத்தை பெற்றுள்ளது. ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களே.
ஆங்கிலத்தின் முக்கியத்தை உணர்ந்தவர்கள் என்றாலும் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறார்கள். அதாவது இரண்டாவது இடத்தில் ஃப்ரெஞ்சுக்கு பிறகு
At 11:01 PM,
விழி said…
பாலசந்தர் கணேசன் அவரகளுக்கு,
பார்வையிட்டு பதிவிட்டதற்கு நன்றிகள். தங்கள் கருத்துக்கள் தொடர்ந்தும் தொடர ஊக்கத்தைத் தருகின்றன.
//ஆங்கிலத்தின் முக்கியத்தை உணர்ந்தவர்கள் என்றாலும் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறார்கள்//
அது தான் முக்கியம். தற்போதய உலகமயமாக்கல் ஒழுங்கின் கீழ் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்பட்டே இருக்க வேண்டும், அது புறக்கணிக்கப்படக்கூடியது அல்ல.
ஆங்கிலம் மட்டுமல்ல, இன்னும் பல துறைகளிலே சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பது வரலாறு.
ஆனால் தற்போது தாய்த் தமிழ்நாட்டிலேயே பயன்பாட்டளவில் தமிழ் இரண்டாம்பட்ச மொழியாகி வருவதுதான்(அனைவருக்கும் பொருந்தாது) கவலையளிக்கிறது.
(இரண்டாம் பட்ச மொழியாகவாவது இன்னமும் வைத்துக்கொண்டிருக்கிறோமே என்றும் சிலர் சொல்வது தான் தமிழின் எதிர்காலத்தைப் பற்றி கவலைகொள்ள வைக்கிறது)
Post a Comment
<< முகப்பு